Saturday 6 July 2013

PASSBOOK-The Real Love Story

PASSBOOK

 

   ஸ்வேதா வேக வேகமாக டிபன் செய்து விட்டு கார்த்திக்-ஐ  எழுப்பினாள். "கார்த்திக் எழுந்திரு டைம் 7 ஆச்சு" என்று கூற மெதுவாய் தன கண்களைத் திறந்து ஈரத்தலையுடன் பொட்டு வைத்துக் கொண்டிருந்த தன்  மனைவியை கண்டு 'குட் மார்னிங் டார்லி' என்றான்.

 கார்த்திக்,ஸ்வேதா இருவரும் காதல் செய்து பெற்றோர்  அனுமதிக்காததால் பதிவு திருமணம் செய்து கொண்டவர்கள். கார்த்திக் அவசரமாக எழுந்து washroom சென்றான். 

'இட்லி ரொம்ப சூப்பர் லைக் யுவர்' - என ஆரம்பித்தவுடன் போதும் போதும் சாப்டு சீக்கிரம் கெளம்புங்க என செல்லமாய் கூறினாள்.. ஷூ  போட்டபடி bye சொல்லி கிளம்பினான்.

   மதியம் சமையல் செய்து கொண்டிருந்த வேலையில் doorbell சத்தம் கேட்டு திறந்தவள் தன்  தாயை கண்டதும் 'வா மா இப்பதான் உன் என் ஞாபகம் வந்ததா' என கேட்டாள். 'அப்பா கொஞ்ச நாள் வீட்லதா இருந்தாரு இன்னைக்கு தா ஆபீஸ் போனாரு அதாமா வர முடியல என்றபடி அமர்ந்தால். இருவரும் நலம் விசாரித்து விட்டு அணைத்து வேலைகளும் ஓய்ந்து தாய் கிளம்பும் நேரம் 'இது உன் அலமாரில இருந்தது உன் அப்பா கண்ல படாம இத எடுத்துட்டு வந்தேன்'.

  இது எதுக்கு மா அவருக்கு வர சம்பளம் எங்க செலவுக்கே பத்த மாட்டேன்குது இதுல bank ல வேற போடா எங்கமா போறது'..

  அப்படி சொல்லாத ஸ்வேதா நீங்க எப்போலாம் சந்தோஷமா இருக்கீங்களோ அப்பலாம் இதுல உங்களால முடிஞ்சது ஐம்பதோ, நூறோ savings ல போடுங்க அது உங்களுக்கு உதவும்னு சொல்லி கொடுத்துட்டு போனாங்க.

   அன்று முதல் அவர்களின் சின்ன சின்ன சந்தோஷங்களின் போதெல்லாம் 100,200 என பதிவு செய்து வந்தால்.. ஸ்வேதாவுக்கு வேலை கிடைச்சதுக்கு 2000 கார்த்திக் promotion-கு 6000 என பதிவு செய்தனர். 

  எல்லோர் வாழ்வையும் போல அவர்களது வாழ்விலும் சந்தேகங்கள் சண்டைகளும் வந்து சென்றன. அனைத்தையும் அவள் அம்மாவிடம் சொல்லி அழுவாள் அவளும் ஒவ்வொரு முறையும் அறிவுரை கூறி செல்வாள்.

   சண்டைகள் சர்சைகளாகி ஏன்தான் நாம லவ் பன்னோமோனு divorce  செய்து கொள்ளும் முடுவுக்கு வந்தனர். தன் தாயிடம் அனைத்தையும் கூறி அழுதாள்.  ஆறுதல் கூறியபடி 'சரி அந்த passbook-ல சேர்து வச்ச பணத்த withdraw பண்ணி share  பண்ணிக்கோங்க'  என கூறினாள். 

   வீட்டிற்கு போகும் வழியில் bank  சென்ற போது cash  counter -ல் வரிசையில் நின்றபடி passbook- ஐ  திறந்து பார்த்தாள். ஒவ்வொரு பதிவையும் பார்த்த பொழுது தங்களது சந்தோமான நினைவுகளை  நினைத்து அழுதபடி வீட்டிற்கு சென்றாள்.

  Divorce paper -ஐ நீட்டி இதுல sign பண்ணு என்றான். கண்ணீரைத் துடைத்தபடி 'இந்தாங்க நம்ம account - இருக்க cash -ஐ withdraw  பண்ணிட்டு வாங்க அபாரம் sign பண்றேன்'என்றபடி passbook -ஐ நீட்டினாள்.

  இப்ப கூட உனக்கு இந்த பணம் தான் முக்கியம்ல என்றபடி சென்றான்.

இரவு  வெகு நேரம் கழித்து வந்து ஸ்வேதாவிடம் passbook -ஐ தந்துவிட்டு அமைதியாய் தன் அறைக்கு சென்றான். ஸ்வேதா மெதுவாக அதை திறந்து பார்த்த பொழுது அதில் 10,000 ருபாய் பதிவு செய்யபட்டிருந்த ரசீதை எடுத்து பார்த்தாள் .

  அதன் பின்னால் 'இது என் வாழ்வில் மறக்க முடியாத நாள் ஸ்வேதா, நீ என் life -ல எவ்ளோ முக்கியமானவனு  இன்னைக்கு தெரிஞ்சுகிட்டேன். passbook -ல மட்டும் சந்தோஷங்களையும் நினைவுகளையும் பதிவு செஞ்ச நம்ம ரெண்டு பேரும் ஏன் அத நம்ம மனசுல பதிவு செய்ய மறந்தோம், Now I promise you that I'll be your best friend and make you happy forever Don't leave me forever my darle..' என்று எழுதி இருந்தது.

  அறைக்கு சென்ற ஸ்வேதா அவனை பார்த்து 'ஏய் hero மறுபடியும் love பண்ணலாமா' என்றாள் சிரித்தபடி.. அவளை பார்த்து சிரித்தபடி sure but  மறுபடியும் சண்டைபோடாம..என்று இருவரும் கண்ணடித்து கொண்டனர்.

            ........................................................................................................................

               Everyone have to save their sweet memories in their passbook called life with love

           ........................................................................................................................
 

No comments:

Post a Comment