Sunday 21 July 2013

















நிழல்கள் அனைத்தையும் நிஜம் என்று நம்புகின்றேன்
அவை நிழல் என்று தெரியாமல்..
நிழல் அல்ல நிஜம் தான் என எண்ணி
அவற்றை என் அருகினில் அமர வைத்து கனவுகள் காண்கிறேன்..

என்ன தான்  வேண்டும் இந்த மனசுக்கு
தேவைகள் அனைத்தும் தெரிந்த இடத்தில் கிடைத்தாலும்
தெரியாத இடத்தில் மட்டுமே அவற்றை தேடி அலைகின்றது
ஆம்.. பாலைவனத்தில் நீர் தேடி வழிதெரியாமல் அலைகின்ற
வழிப்போக்கனைப் போல..

எனக்கு  நானே சில நேரங்களில் பேசிக்  கொள்கிறேன்
என்னை  நானே சமாதானப் படுத்திக் கொள்கிறேன்..

என்னுள் ஒருவன் கண்ணீரை துடைக்கவும்
சந்தோஷங்களை பகிர்ந்து கொள்ளவும்..
இளைப்பாறும்  தாயின் மடி அவன் பறித்துக் கொடுத்தது..
பயணம்  நடுவே சிறு நிழற்குடை அமைக்க தந்தையைப் போல
உரையாடல் நடுவே சிறு ஊடல் கொண்டு
அந்த ஊடலில் சிறு பதிலுரைத்த நண்பன்..

என் உயரிய தோள்கள் வலி பெரும் வேலையில்
எனை சுமந்து செல்லும் காதலன்..
என் கைகள் அவனை தேடும் வேளைகளில்
என் கண் முன்னே ஒரு காட்சி பிழையாய்

சாரல் கொண்ட நேரங்களில் அவன் நெஞ்சம் மட்டும்
போதுமென்றே  இளைப்பாரிடுவேன்..

ஒரு SMS -ல்  படித்து போல அவன் முதுகுக்கு பின்னால்
அவனை தட்டி கொடுக்க வேண்டும்..
காதலியாக..
அவன் முகத்துக்கு முன்னாள் கை தட்ட வேண்டும்
ரசிகையாக..

அடிக்கடி எனை கேட்கின்றாய் எங்கே செல்ள்ளலாமென்று..
இப்படி கேட்கும் தருணம் நான் கூற வருவது
எங்காவது  கூட்டி செல்லேன்..
ஏனெனில் உன்னோடு எங்கு சென்றாலும்
அது எனக்கு Happy  Journey  தான்..

இனி தலையணை வேண்டாம் உன் தோழ்கள் போதும்
என் தலை சாய்க்க..
இனி இரவுகள் வேண்டாம் உன் கண்கள் போதுமடா
நான் இளைப்பாற..

நாள்தோறும் இனி கூறிடுவேன் உன்னிடம்
I Love You என..

                                                                              -வித்யாதீபக்















கூர்தீட்டிய வாளில்லை
ஆனாலும் எனை குத்தி கிழிக்கின்றது
உன் பார்வை..
எரிகின்ற தீபம் இல்லை
ஆனாலும்  எனை எரித்து சாம்பலாக்கியது
உன் மௌனம்..
விஷமொன்றும் தேவையில்லை
எனை மண்ணில் வீழ்த்தியது
நீ அருகில் இல்லாத நாட்கள்..










மழைத்துழி என் முகம் தொடும் நேரம் 
உன் ஸ்பரிசம் வேண்டி கேட்கின்றேன்..
கை கோர்த்து சிறுது தூரம் 
நடந்தாயடா.. அந்த பாதை தான் ஏனோ
சின்னதாய் அமைந்தது.. 
இடைவெளி இது போதுமாடா 
இனி ஏக்கங்கள் வேண்டாம் வந்திடடா 
நமை இணைத்த மழைக்காலம் 
மீண்டும்  வந்துவிட்டது..

Tuesday 16 July 2013



















உன் முன்னே கை கைகட்டி நிற்கும் 
தலைவி அல்ல நான்..
உன் பின்னால் கை கட்டி வாழும் 
ரசிகை நான்..

















புத்தகங்கள் என்னை 
கேலி செய்கின்றன 
என்னை படிக்காமல் 
அவன் இதயத்தை படிக்கிறாயே என்று..











வாழும் இவ்வுலகில் அனைவரின்
கைக்குழந்தை













புத்தகம் விற்று 
தன்  தங்கையின் 
பசியினை போக்கும் 
ஏழை மாணவனின் 
கண்ணீரில் வாழ்கிறாள்
இந்த கல்வித்தாய்..