Monday, 28 May 2012


சில நிமிடங்கள்..


உன்னுடன் வாழ்ந்த சில நிமிடங்கள்
மறவாது என்றும்..

நாம் சந்தித்த முதல் தருணம்
நீ பார்த்த முதல் பார்வை,
மறவாது என்றும்..

பேசிய முதல் தருணம்
நாம் பேசிய முதல் வார்த்தை,
மறவாது என்றும்..

காதல் தான் என தெரியாமல்
நட்பை தொடங்கிய
நம் முதல் நாட்கள்,
மறவாது என்றும்..

உறங்கிய மனிபோழுதுகள்
உன்னையே நினைத்தேன்
நீ கூட என்னை நினைத்து கொண்டு இருகிறாய்
என்பதை அறியாது
உறக்கத்தில் வந்த நம் முதல் கனவு,
மறவாது என்றும்..

காதலித்த முதல் நாள்
பேருந்தில் அமர்ந்த போது
நான் கண்ட உன் முதல் ஸ்பரிசம்
மறவாது என்றும்..

நீ அருகில் இருந்த நேரத்தில்
என் கைகளில் நீ அளித்த
முதல் முத்தம்,
மறவாது என்றும்..

காதலில் இருந்த நாம் இருவரும்
கை கோர்த்து திரிந்த நாட்கள்,
மறவாது என்றும்..

காதலியாய் மட்டுமல்ல
காலமெல்லாம் துணையாய்
நாம் இருக்க
கைகள் நடுங்கிய படி
நீ போட்ட முதல் முடுச்சு,
மறவாது என்றும்..

இன்றும் உனக்காக
நான் வைக்கும் குங்குமம்
மறவாது என்றென்றும்..

இன்றும் என்னுடன் காதலுடன் கைகோர்த்து
உலா வரும் கணவனாய் மட்டுமல்ல

என் காதலனாய் மட்டுமல்ல
என் தோழனாய் மட்டுமல்ல
என் வாழ்வில் அனைத்து நிமிடமும்
என் நிழலாய் நீ தொடர்வது
மரணம் என்னை சூழும் நேரத்திலும்
மறவாது என்றென்றும்...

No comments:

Post a Comment