தொலைத்தேன் உன் முகவரியை...
பேசிய பொழுதுகள் ஓய்ந்து போனது
இன்றும் என் நினைவுகளில் ..
உங்களிடம் பேசிய பொழுதுகள்
என் மனம் உங்களிடம்..
கண்ணீருடன் கழித்த பொழுதுகள்
சோகங்கள் சிதறின..
சந்தோஷமாய் கழித்த பொழுதுகள்
நட்பின் வகுப்பு அறையில்..
உன் வீடு என் வீடென
ஊரெல்லாம் சுற்றி திரிந்தோம்
நம் நட்பின் முகவரி தேடி..
கைகோர்த்து நடந்த நிமிடங்கள்
அனைத்தும் முடிந்து,
இன்று புகைபடத்தில் மட்டுமே காண முடிந்தது
என் நண்பனின் புன்னகையை..
...வித்யா தீபக்...
No comments:
Post a Comment