விடியலை தேடி இனி ஒரு பயணம்
தேடி கிடைத்த சுதந்திரம் இங்கே
தேடும் நிலையும் வந்தது எங்கே
பாடி பாடி சலித்தான் பாரதி
அவன் பாட்டும் இங்கே மறதி தான் பாரடி..
ஆயிரம் தலைவர்கள் அன்றே உழைத்து
அடிமை நிலையை போக்கிய சுதந்திரம்
இன்று அடிமையாய் பிறர் கையில்..
அரசியலும் அயல்நாடும் நமை அடிமையாய்
செய்திடும் முன்பே அனைவரும்
ஒன்றே என உணர்த்திடுவோம்
மீண்டும் ஒரு சுதந்திரம் வேண்டும் இங்கே
அதை பெற்று தரவே புறப்படு நண்பா..
No comments:
Post a Comment