Thursday, 9 August 2012

Recently i wrote this lyrics for a album..
காதல் கடந்து  கல்யாணம் செய்ய காத்திருக்கேன்


பருவம் பெற்று பலநாள் ஆனவதா
பகலும் இரவும் உனையே நெனச்சவ நான் 
காதலால் என்ன கட்டி போட்டு விட்டு 
கழுத்துல நீஉம் ஒரு தாலி கட்ட மறுப்பது ஏன்..

பெண்பார்க்க வந்த சனத்த  தட்டி களிச்சுபுட்டு
பெதவளையும் இங்க பறி கொடுத்து
அப்பாவ நம்பி அனாதைய நிக்கிறேன்..

என்னோட படிச்சவ ஏழாம் கொட்டி சிரிச்சாலும்
என்னோட மனசு இப்பவும் உன்னையே சுத்துது
தாரமா ஏத்துகிட்ட மனசளவு வாழ்ந்தாலும் 
தாலி இல்லாம இந்த ஊரு தரம்கெட்டு பேசுதடா..

என் கண்ணாடி மனசைத்தான் 
கல்லால அடிக்கிறாங்க
இத கண்ட கடவுளும் 
கல்லவே நிக்குதிங்க..

உறக்கமில்லா கண்ணுலதா 
ஒருகோடி கனவிருக்கு
உன் உருவம் மட்டும்தா
என் மனசெல்லாம் நெறஞ்சிருக்கு..

ஊரு மெச்ச நீ உன் உறவோட வந்து 
பேசும் வார்தைக்க இவ பலகாலம் காத்திருக்கா
தருணம் எப்போ கூடும் 
என் கழுத்தில் மஞ்ச தாலி எப்போ ஏறும்..

தனிமையில நா வாழும் வாழ்கை இது போதும் 
என் தாய என் மகளை பார்க்கும் நாளும் வரணும்..

காத்திருக்கேன் காத்திருக்கேன் 
காலமெல்லாம் காத்திருக்கா 
கனவு நிறைவேற வழி ஒன்னு பாத்திருக்கேன் 
கனவு நிறைவேறுமா..
இல்ல இந்த கன்னி உடல் சாகுமோ..

No comments:

Post a Comment